Dec 26, 2019 11:57 AM

‘மாயன்’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்!

‘மாயன்’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட அனிருத்!

சன் தொலைக்காட்சியில் விஷால் தொகுத்து வழங்கிய ‘சன் நாம் ஒருவர்’ என்ற நிகழ்ச்சிய இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கும் படம் ‘மாயன்’. சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாகும் இப்படம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் தயராகிக் கொண்டிருக்கிறது.

 

மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் ஹீரோவாகவும், பிந்து மாதவி ஹீரோயினாகவும் நடிக்கும் இப்படத்தில் சிறப்பு பாடல் காட்சியில் பியா பாஜ்பை நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தெறி தீனா, ராஜ சிம்மன், கஞ்சா கருப்பு, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாள அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார். அந்த ஒரு பாடல் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

 

இந்தியாவின் ஃபாக்ஸ் & கிரோவ் ஸ்டியோஸ் (FOX & CROW STUDIOS) நிறுவனமும், மலேசியாவின் டத்தோ பாதுக்கா ஸ்ரீ டாக்டர்.மோகன சுந்தரத்தின் ஜி.வி.கே.எம் எலிபெண்ட் பிக்சர்ஸ் (GVKM ELEPHANT PICTURES) நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இப்படத்தின் இணை தயாரிப்பாளர் ஆவார்.

 

Mayan First Look