Jul 24, 2019 06:20 AM

படமாகும் ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவல்! - அலரும் சினிமா பிரபலங்கள்

படமாகும் ‘அனிதா பத்மா பிருந்தா’ நாவல்! - அலரும் சினிமா பிரபலங்கள்

பல ரகசிங்கள் புதைந்து கிடக்கும் சினிமாவைப் பற்றி சிலர் கூறும் உண்மைகளால் அவ்வபோது சில சர்ச்சைகள் உருவாகி வருகிறது. அந்த வகையில், ’அனிதா பத்மா பிருந்தா’ என்ற நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

 

தமிழ் சினிமாவில் பல கசப்பான மறைக்கப்பட்ட உண்மைகளையும், அதிர்ச்சியூட்டும் பலான மேட்டர்களை பற்றியும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்த இந்த நாவலை, சினிமாத்துறையோடு மிக நெருக்கமான தொடர்பில் இருக்கும் ஏ.எல்.சூர்யா என்ற இளைஞர் எழுதியிருக்கிறார்.

 

Al Surya

 

தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்த நாவல் தற்போது திரைப்படமாகிறது. இதை எழுதிய ஏ.எல்.சூர்யாவே இப்படத்தை எழுதி இயக்குவதோடு, இசையமைத்து ஹீரோவாக நடித்து தயாரிக்கவும் செய்கிறார்.

 

சினிமாத்துறையோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருக்கும் ஏ.எல்.சூர்யா, தான் சந்தித்து பழகிய பலரிடமும் தனக்கு உண்டான மறக்க முடியாத அனுபவங்களையும், இனிய நினைவுகளையும், கசப்பான உண்மைகளையும், மனதில் ஆழமாக பதிந்த சம்பவங்களையும், ஆற முடியாத காயங்களையும் நாவலாக எழுதியவர், அதை சினிமாவுக்கான பரபரப்பான திரைக்கதையாகவும் எழுதி முடித்திருப்பவர், தற்போது படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

இப்படத்திற்காக முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களை ஒப்பந்தம் செய்திருப்பவர், படத்தில் வரும் 4 முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

 

சினிமாவில் பிரபலமாக இருக்கும் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரது நிஜ வாழ்க்கையில் நடந்த இனிப்பான மற்றும் கசப்பான சம்பவங்கள் படத்தில் நிறைந்திருக்கும் என்பதால், இப்படத்தின் மீது கோலிவுட்டின் பிரபலங்களின் பார்வை பட ஆரம்பித்துவிட்டது. மேலும், இப்படம் வெளியானால் யாரை பற்றி, எந்த மாதிரியான உண்மை தெரிய வருமோ!, என்று தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் அலர தொடங்கிவிட்டார்கள்.

 

Anitha Badma Birundha Novel

 

ஏற்கனவே இவரது ’அனிதா பத்மா பிருந்தா’ நாவல் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அது திரைப்படமாக உருவாகும் போது, இந்திய சினிமா அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கும் ஏ.எல்.சூர்யா, ’ஆழ்மனமும் அதன் அபரிமித ரகசியங்களும்’, ’பணமே...பணமே...ஓடி வா’, ’பேராற்றல் படைத்தவர்களே...எழுந்திருங்கள்’, ‘கோடிக்கணக்கான ரூபாயை ஆழ்மனதை இயக்கி அடைவது எப்படி?’ ஆகிய நூல்களை எழுதி இலக்கிய உலகில் பிரபலமானவராக திகழ்வதோடு, தனது மோட்டிவேஷன் வீட்டியோக்கள் மூலம் யூடியூபில் பிரபலமானவராக இருக்கிறார்.

 

AL Surya

 

பி பாசிட்டிவ் என்ற தனது யூடியூப் சேனல் மூலம் இவர் வெளியிட்டிருக்கும் சுமார் 200 க்கும் மேற்பட்ட வீட்டியோக்கள் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது. இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கையும் பல லட்சங்களாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.