டிடி பற்றிய மற்றொரு பரபரப்பு! - வைரலாகும் வீடியோ இதோ

முன்னணி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக உள்ள டிடி என்ற திவ்யதர்ஷினி, நீச்சள் குளத்தில் ஆண் ஒருவருட நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய அந்த புகைப்படத்தில் இருக்கும் ஆண், அவரது புதிய காதலர் என்று கூறப்பட்டாலும், அது குறித்து டிடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த நிலையில், டிடி வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றின் மூலம் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டிருப்பதோடு, அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளி பணி, நடிப்பு என்று டிடி பிஸியாக இருந்தாலும், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் இலங்கைக்கு சென்ற டிடி, அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில், டிடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பெண் ரசிகை ஒருவர் டிடி-யை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியடைந்ததோடு, கண்ணீர் விட்டு அழுகிறார். உடனே அவரது கண்ணீரை துடைக்கும் டிடி, அவரை கட்டுப்பிடித்து அவரை சமாதனப்படுத்துகிறார். ஆனால், அந்த பெண் தொடர்ந்து டிடி கையை பிடித்துக் கொண்டு அழுகிறார்.
இதோ அந்த வீடியோ,