Feb 29, 2020 07:44 AM

அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை ரெடி! - இவர் தான் அவராம்

அனுஷ்காவுக்கு மாப்பிள்ளை ரெடி! - இவர் தான் அவராம்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு சொல்லும்படியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வந்தவர், பல போராட்டங்களுக்குப் பிறகு உடல் எடையை குறைத்துவிட்டு, தற்போது தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்த நிலையில், அனுஷ்கா நடிகர் பிரபாஷை காதலிப்பதாக அவ்வபோது தகவல் வெளியாகும். இதனை, அனுஷ்கா மற்றும் பிரபாஷ் இருவரும் மறுப்பார்கள். ஆனால், அனுஷ்காவின் திருமண வதந்தி தொடர்கதையாக இருந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. பிறகு அதுவும் வதந்தியானது.

 

தற்போது அனுஷ்காவுக்கு 38 வயதாகிறது. அவரது பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை தேடுவதில் தீவிரமாக உள்ளார்கள். அனுஷ்காவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன், என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், அவர் யாரை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறார், என்பது மட்டுமே சிதம்பர ரகசியமாக இருக்கிறது.

 

இந்த நிலையில், அனுஷ்கா திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் நபர் பற்றிய தகவல்களை தெலுங்கு மீடியாக்கள் வெளியிட்டுள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குநராக இருப்பவரின் மகனை தான் அனுஷ்கா திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக, தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம், அந்த இயக்குநர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

இது உண்மையா அல்லது வதந்தியா, என்று பொருத்திருந்து பார்ப்போம்.