Feb 12, 2019 05:53 AM

அனுஷ்காவின் வெளிநாட்டு காதலர்! - பரபரப்பு ஏற்படுத்திய போட்டோவுக்கு முற்றுப்புள்ளி

அனுஷ்காவின் வெளிநாட்டு காதலர்! - பரபரப்பு ஏற்படுத்திய போட்டோவுக்கு முற்றுப்புள்ளி

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்த அனுஷ்கா ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரித்ததால் புதிய படங்களில் நடிக்க மறுத்ததோடு, உடல் எடையை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது, என்று முடிவு எடுத்தார்.

 

இதற்கிடையே, பிரபாஸும் அவரும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியாக, இருவரும் அதற்கு மறுப்பும் தெரிவித்தார்கள். இருப்பினும், அனுஷ்காவுக்கு அவரது பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடுவதில் தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியானது.

 

மேலும், திருமணத்திற்காக தான் அனுஷ்கா புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதை மறுக்கும் விதத்தில் உடல் எடையை குறைத்த அனுஷ்கா, மீண்டும் படங்களில் நடிக்கவும் தொடங்கிவிட்டார்.

 

இந்த நிலையில், அனுஷ்கா வெளிநாட்டு நபர் ஒருவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் தான் அனுஷ்காவின் காதலர் என்றும் கூறப்பட்டது. தற்போது நடிகைகள் வெளிநாட்டினரை காதலித்து திருமணம் செய்வது தான் டிரெண்ட்டாகியுள்ளதால், அனுஷ்காவும் வெளிநாட்டினரை காதலிக்கிறார், என்றும் கூறப்பட்டது.

 

இப்படி தீயாக பரவிய இந்த புகைப்படத்திற்கும், அதை தொடர்ந்து பரவித காதல் விவகாரத்திற்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆம், அனுஷ்காவுடன் இருக்கும் அந்த வெளிநாட்டு நபர் யார்? என்பது தெரிந்துவிட்டது.

 

உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அனுஷ்கா, ஆஸ்திரியா நாட்டில் சிறப்பு சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். அத்துடன் அந்நாட்டி நியூட்டிரிசனிஸ்ட் Luke Coutinho என்பவரும் அனுஷ்காவுக்கு உடல் எடையை குறைக்க உதவினாராம். அனுஷ்காவுடன் போட்டோவில் இருக்கும் அந்த வெளிநாட்டு நபர் அந்த நியூட்டிரிசனிஸ்ட் தானாம்.

 

Anushka

 

அதுமட்டும் அல்ல, நியூட்டிரிசனிஸ்ட் Luke Coutinho தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவையே விளம்பர தூதராகவும் நியமித்திருக்கிறாராம்.