Jul 08, 2019 03:11 AM

ஓவியாவுக்கு அப்பாவாக நடித்த ராஜ்மோகன்குமாருக்கு குவியும் பாராட்டுகள்!

ஓவியாவுக்கு அப்பாவாக நடித்த ராஜ்மோகன்குமாருக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பு மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் குணச்சித்திர நடிகர்கள் வரிசையில் ராஜ்மோகன்குமார் புதிதாக இணைந்திருக்கிறார்.

 

கடந்த 2010 ஆம் ஆண்டு சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘களவாணி 2’ வெளியாகியுள்ளது. விமல், ஓவியா மற்றும் இயக்குநர் சற்குணம் என்று அதே கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

மேலும், இப்படத்தில் ஓவியாவுக்கு அப்பாவாக அரசியல்வாதி கதாபாத்திரட்தில் நடித்திருக்கும் ராஜ்மோகன்குமார் தனது எதார்த்தமான நடிப்பால் மக்கள் மனதில் பாராட்டை பெற்று வருகிறார். படம் பார்த்தவர்கள் அனைவரும் இவரது நடிப்பை பாராட்ட தவறுவதில்லை.

 

Rajmohankumar and Vimal

 

செல்லத்துரை என்ற கதாபாத்திரத்தில், பஞ்சாயத்து தலைவராக நடித்து அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து, அனைவரின் பாராட்டினையும் பெற்றிருக்கிறார்.

 

ஒவ்வொரு காட்சியிலும் அவரது நடிப்பு அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு கதாபாத்திர நடிகர் கிடைத்துவிட்டார்.

 

Rajmohan kumar