Feb 06, 2019 04:59 AM

விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் ஸ்பெஷல் அம்சம்!

விஜய்க்காக ஏ.ஆர்.ரஹ்மான் செய்யும் ஸ்பெஷல் அம்சம்!

’சர்கார்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. விளையாட்டுத் துறையில் நடைபெறும் மோசடிகளை பேசும் படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் விளையாட்டு அணியின் பயிற்சியாளராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

 

ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்தில் நயந்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதால் படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

 

இந்த நிலையில், விஜய் 63-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பல புதிய அம்சங்களை கையாள இருக்கிறாராம். காரணம், அட்லி சொன்ன கதையுக், அதற்காக அட்லி ரஹ்மானிடம் கேட்டிருக்கும் இசையும் அத்தகைய சுவாரஸ்யமானதாக இருப்பதால், ரஹ்மானுக்கு இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பும், ஈடுபாடும் ஏற்பட்டிருப்பதாக, அவரே சமீபத்திய பேட்டில் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

 

ஏற்கனவே ‘சர்கார்’ படத்தில் ரஹ்மான் இசையில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதோடு, பல சாதனைகளையும் நிகழ்த்திய நிலையில், ‘விஜய் 63’ படமும் இசையில் தனி இடத்தை பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.