Feb 16, 2019 08:38 AM

ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு! - மகிழ்ச்சியில் ‘அசுரகுரு’ படக்குழு!

ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு! - மகிழ்ச்சியில் ‘அசுரகுரு’ படக்குழு!

JSB பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் JSB சதீஷ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ’அசுரகுரு’.

 

விக்ரம் பிரபு ஆக்ஷன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார்.இவர்களுடன் பாகுபலி சுப்பாராஜ், யோகிபாபு,  நாகிநீடு, ஜெகன், குமரவேல், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

அண்மையில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தின்  டீசரை வெளியிட்டார். அசுரகுரு படத்தின் டீசரை பார்த்த ஏ.ஆர். ரஹ்மான் படக்குழுவினரை பாராட்டியுள்ளார். அசுரகுரு படக்குழுவினர் மிகுந்த மாகிழ்சியில் உள்ளனர்.

 

சென்னை, உடுமலைப்பேட்டை, ஹைதராபாத்  போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள ‘அசுரகுரு’ விரைவில் திரைக்கு வரவுள்ளது.

 

Asuraguru

 

ஏ.ராஜ்தீப் இயக்கியுள்ள இப்படத்திற்கு கணேஷ் ராகவேந்திரா இசையமைத்திருக்கிறார். விசாரணை மகாலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கபிலன் வைரமுத்து, சந்துரு மாணிக்கவாசகம் வசனம் எழுதியுள்ளார்கள். கபிலன் வைரமுத்து மற்றும் பழநிபாரதி படல்கள் எழுதியுள்ளார்கள்.