Jan 25, 2019 09:40 AM
ஆக்ஷன் படத்திற்காக புது அவதாரம் எடுக்கும் அரவிந்த்சாமி!

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தனது ரீஎண்ட்ரியை அமர்க்களமாக தொடங்கியிருக்கும் அரவிந்த்சாமி, அதே சமயம் கதை தேர்விலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே, ‘சலீம்’ பட இயக்குநர் நிர்மல்குமாருடன் கைகோர்த்திருக்கும் அரவிந்த்சாமி, அப்படத்தில் இரண்டுவிதமாக லுக்கில் நடிக்க இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகும் இப்படத்திற்கான தனது உடல் எடையை கூட்டியிருக்கிறார்.
நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’, ஹன்சிகாவின் ‘மஹா’, அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘பாக்சர்’ ஆகிய படங்களை தயாரித்து வரும் எக்ஸ்ட்ரா எண்டெர்டைன்மெண்ட் நிறுவனத்தின் 12 வது படமாக உருவாகும் இப்படத்தின் பஸ்ட் லுக் மார்ச் மாத துவக்கத்திலும், படப்பிடிப்பு மார்ச் மாத இறுதியிலும் தொடங்க இருக்கிறது.