Aug 05, 2018 07:13 PM
அருண் விஜயின் ‘தடம்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்!

அருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் வெளியான‘குற்றம் 23’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரெதான் - தி சினிமா பீப்பிள் நிறுவனம் சார்பாக இந்தர் குமார், மீண்டும் அருண் விஜயை ஹீரோவாக வைத்து தயாரிக்கும் படம் ’தடம்’.
மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான படமாக உருவாகும் ‘தடம்’ படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் வெகுவாக பாராட்டியதோடு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து படத்தின் இசை வெளியீடு மற்றும் பட வெளியீடு தேதியை மிக விரைவில் தயாரிப்பு தரப்பு அறிவிக்க உள்ளனர்.