சிவகார்த்திகேயனை சீண்டிய அருண் விஜய்! - கோபத்தில் ரசிகர்கள்

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான ‘Mr.லோக்கல்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் ஓபனிங் பெற்றுள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதால், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் “நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட” என்று சதீஷ் கேட்க, அதற்கு சிவகார்த்திகேயன் “என் மேல ரொம்ப காண்டுல இருக்கீங்க போல” என்று பதில் கூறுகிறார். இது நடிகர் அருண் விஜய் முன்பு பேசியதற்கு, சிவகார்த்திகேயனின் பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இன்று அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்யும் விதமாக ஒரு ஸ்மைலியை போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகிறார்கள், என்று கோபடமைந்ததுடன், அருண் விஜயின் பதிவுக்கு காரசாரமாக கமெண்ட்டும் போட்டு வருகிறார்கள்.
அடுத்த ட்வீட் போட்ட அருண் விஜய், “என் அடுத்தப்படத்தின் அடுத்த அறிவிப்பை நானே தெரிவிப்பேன், வேறு எதனையும் நம்பாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். எதற்காக ஸ்மைலியை போட்டார், பட அறிவிப்பு பற்றி ஏன் கூறுகிறார், என்று தற்போது வரை தெளிவாக தெரியாததால், அருண் விஜய், சிவகார்த்திகேயனை கலாய்ப்பதற்காகவே இப்படி ட்வீட் போட்டார், என்று கூறப்படுகிறது.
அருண் விஜயின், இத்தகைய நடவடிக்கையால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவர் மீது கடுப்பாகியுள்ளனர்.
😷
— ArunVijay (@arunvijayno1) May 17, 2019