Jun 05, 2019 07:59 AM

வரலட்சுமிக்காக களத்தில் இறங்கிய ஆர்யா!

வரலட்சுமிக்காக களத்தில் இறங்கிய ஆர்யா!

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக உயர்ந்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி, ஹீரோயின், வில்லி மற்றும் குணச்சித்திர வேடம் என்று பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து வருவதோடு, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

 

தமிழில் கைவசம் பல படங்கள் வைத்திருக்கும் வரலட்சுமியின் நடிப்பில் உருவாகும் படம் ‘கன்னித்தீவு’. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் வரலட்சுமியுடன் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா, சுபிக்‌ஷா, ஆஷ்னா ஜாவேரி ஆகியோருடம் நடிக்கிறார்கள்.

 

Kannitheevu

 

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ‘கன்னித்தீவு’ படத்தின் புரோமோஷன் வேலைகள் நேற்று தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், வரலட்சுமிக்காக நடிகர் ஆர்யா, ‘கன்னித்தீவு’ புரோமோஷன் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

 

அதன்படி, நேற்று ‘கன்னித்தீவு’ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ஆர்யா, வரலட்சுமி மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சுந்தர் பாலு என்பவர் தயாரித்து வரும் ‘கன்னித்தீவு’ படத்திற்கு அரோல் கரோலி இசையமைக்க, சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார்.