Jan 31, 2019 06:54 AM

பிரபல நடிகைக்கும் ஆர்யாவுக்கு திருமணம்! - தேதி அறிவிப்பு

பிரபல நடிகைக்கும் ஆர்யாவுக்கு திருமணம்! - தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவை பார்ப்பவர்கள் எல்லாம், ”எப்போது திருமணம்” என்று தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் அவரது திருமணம் குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பை வைத்திருந்தாலும், மனுஷன் என்னவோ பிளேய் பாய் போல பல கிசு கிசுக்களில் சிக்கிக்கொண்டே இருப்பார்.

 

தன்னுடன் இணைந்து நடிக்கும் கதாநாயகிகளுடன் காதல் கிசுகிசுக்கப்படும் ஆர்யா, தற்போது முன்னணி நடிகை ஒருவரை திருமணம் செய்துக்கொள்ள தயாராகிவிட்டார். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக உயர்ந்திருக்கும் சாயீஷா தான் அந்த ஹீரோயின்.

 

‘கஜினிகாந்த்’ படத்தில் சாயீஷாவும், ஆர்யாவும் சேர்ந்த நடித்த போது இருவரிடமும் காதல் மலர்ந்துள்ளது. இது குறித்து கிடத்தை தகவலின் அடிப்படையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போது, இருவரும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை.

 

இதற்கிடையே, ஆர்யா - சாயிஷா திருமணம் விரைவில் நடைபெறப் போகிறது என்ற தகவலை நம் இணையதளம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்த நிலையில், தற்போது அவர்களது திருமணம் தேதி, இடம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

 

Arya - Sayesha

 

வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஆர்யா - சாயீஷா திருமணம் ஐதராபாத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இரு விட்டாரும் திருமண வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர்.