Jun 10, 2020 12:07 PM
அசோக் செல்வனின் புதிய படம்! - பெண் இயக்குநர் இயக்குகிறார்

‘ஓ மை கடவுளே’ படம் மூலம் மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த அசோக் செல்வன், அடுத்த் பெண் இயக்குநர் ஒருவரது படத்தில் நடிக்க இருக்கிறார். ’திருடன் போலீஸ்’, ‘ஒருநாள் கூத்து’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்த கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் இப்படத்தை தயாரிக்கிறார்.
இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்வாதினி இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார். லியான் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்ய, ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பு செய்கிறார்.
கெனன்யா பிலிம்ஸ் நிறுவனத்தின் 7 வது படமாக உருவாகும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இன்று பாடல் வேலையுடன் எளிமையான பூஜையுடன் இப்படத்தின் பணிகள் தொடங்கியது.