May 09, 2019 04:14 PM

உதவியாளரை கொலை செய்ய முயன்ற நடிகர் பார்த்திபன்! - போலீசில் புகார்

உதவியாளரை கொலை செய்ய முயன்ற நடிகர் பார்த்திபன்! - போலீசில் புகார்

பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மீது அவரது உதவியாளர் ஜெயம் கொண்டான், கொலை செய்ய முயன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

 

இது குறித்து ஜெயம் கொண்டான் அளித்த புகாரில், “நான் பாடலாசிரியராக இருக்கிறேன். நடிகர் பார்த்திபன் இயக்குநர் என்ற முறையில் 10 வருடமாக பழகி வருகிறேன். அவருக்கு ஆபிஸ் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை என எல்லா வேலைகளையும் எடுத்துக்கட்டி செய்து வந்தேன். இப்போது எடுத்துக் கொண்டு இருக்கும் ‘ஒத்த செருப்பில்’ தொடர்ந்து பணிபுரிந்து வருகிறேன்.

 

பார்த்திபனால் வேலையில் இருந்து நீக்கப்பட்டவரிடம் இவரது தோட்ட வேலை காரணமாக ஒரு அட்ரஸ் கேட்டேன். இவருக்காக அட்ரஸ் கேட்ட என்னை நுங்கம்பாக்கம் 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் வைத்து 8/5/2019 சுமார் 3 மணியளவில் இவரும் இவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும் என்னை அடித்து உதைத்து மாடியில் இருந்து தள்ளிவிட பார்த்தனர். நான் அவரிடம் இருந்து தப்பித்து வந்துவிட்டேன். 4 பிரேம் தியேட்டரில் 3வது மாடியில் உள்ள சிசிடிவி-யில் இந்த காட்சி பதிவாகியிருக்கும்.

 

என்னைப் போல் எத்தனையோ உதவி இயக்குனர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இவரால் என் உயிர்க்கு ஆபத்து நேரிடும் என்பதால் எனக்கு தக்க பாதுகாப்பு கேட்டு இவ்விண்ணப்பத்தை கோருகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.