லாஸ்லியாவுடன் இரவு 2 மணிக்கு...! - கவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பிக் பாஸ் சீசன் 3 யின் ஆரம்பத்தில், முதல் சீசனை போல காதல் விவகாரத்தை வைத்து பரபரப்பு ஏற்படுத்த நினைத்தார்கள். அதன்படி, கவின் தனது காதல் விளையாட்டை தொடங்கினாலும் அவரது ஆட்டம் அந்த அளவுக்கு சூடு பிடிக்கவில்லை. மாறாக லாஸ்லியாவின் சேட்டைகள் தான் மக்களிடம் பிரபலமானது.
தற்போது எலிமினேட் ரவுண்ட் மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் சேட்டை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அதாவது, லாஸ்லியா பின்னாடி சுற்றிய கவின் தற்போது சாக்ஷியை காதலிப்பதாக கூறி வந்தார். ஆனால், தற்போது சாக்ஷியை கழட்டிவிட்டவர், மீண்டும் லாஸ்லியா மீது காதல் கொண்டிருக்கிறாராம்.
இன்றைய எப்பிசோட்டில் சாக்ஷிக்கு ஆதரவாக அனைத்து போட்டியாளர்களும் பேச, நடுவில் தர்ஷனோ “இரவு 2 மணிக்கு லாஸ்லியாவுடன் என்ன பிரன்ஷிப்” என்று கவினிடம் கேட்கிறார். இதனால், இன்றைய எப்பிசோட்டில் கவினின் காதல் பஞ்சாயத்து பெரும் பரபரப்பு ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
இதோ, அதற்கான புரோமோ,
#Day39 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/WRLv95q6UV
— Vijay Television (@vijaytelevision) August 1, 2019