May 08, 2019 06:02 AM

போலீஸ் கண்ட்ரோல் ரூம் பின்னணியை கொண்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘100’

போலீஸ் கண்ட்ரோல் ரூம் பின்னணியை கொண்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘100’

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவரான அத்ர்வா முரளி முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம் என்ற சிறப்போடு, இதுவரை எந்த திரைப்படத்திலும் சொல்லப்படாத போலீஸ் கண்ட்ரோல் ரூமின் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகும் முதல் படமாக ‘100’ உருவாகியுள்ளது.

 

‘டார்லிங்’, ’எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ விரைவில் வெளியாக உள்ள யோகி பாபு ஹீரோவாக நடித்த ‘கூர்கா’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் ‘100’ படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.

 

போலீஸ் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதிரொலிக்கும் விதமாக உருவாகியிருப்பதோடு, போலீஸ் கண்ட்ரோல் ரூம் பற்றி மக்கள் அறியாத பல விஷயங்களையும் அதன் பின்னணியையும் சொல்கிற படமாகவும் உள்ளது.

 

நாளை (மே 9) வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதர்வாவின் சினிமா பயணத்தில் இப்படம் முக்கியமான படமாக இருக்கும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.