Mar 07, 2019 06:31 PM

இயக்குநர் கண்ணனின் ஆச்சரியமான பல விஷயங்கள் ‘பூமராங்’ கில் இருக்கிறது - அதர்வா முரளி

இயக்குநர் கண்ணனின் ஆச்சரியமான பல விஷயங்கள் ‘பூமராங்’ கில் இருக்கிறது - அதர்வா முரளி

அதர்வா முரளி நடிப்பில், கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பூமராங்’ நாளை (மார்ச் 8) உலகம் முழுவதும் வெளியாகிறது. நதிநீர் இணைப்பு பற்றி பேசும் முதல் தமிழ்த் திரைப்படம் என்பதால் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இயக்குநர் கண்ணன் உள்ளிட்ட பூமராங் படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

 

இந்த நிலையில், படத்தின் ஹீரோ அதர்வா முரளி, ‘பூமராங்’ திரைக்கதையில் இயக்குநர் கண்ணன் சார் பல ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதாக கூறியிருப்பது, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை பல படங்களு அதிகரித்திருக்கிறது.

 

இயக்குநர் கண்ணன் மற்றும் பூமராங் படம் குறித்து கூறிய அதர்வா முரளி, “எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன 'பூமராங்' ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும்  இருந்தது.

 

Rajini Meet Boomerang Team

 

நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார்.

 

ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது  என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு.” என்றார்.