Oct 25, 2019 04:31 AM

முதலமைச்சர் ஏரியாவில் அட்லீயின் பிரம்மாண்ட வீடு! - வியப்பில் கோலிவுட்

முதலமைச்சர் ஏரியாவில் அட்லீயின் பிரம்மாண்ட வீடு! - வியப்பில் கோலிவுட்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நடிகர்கள் சிலர் உச்சத்தை தொடுவது அவ்வபோது நடக்கும். ஆனால், இயக்குநர் இப்படி உச்சத்தை தொடுவது என்பது ஆச்சர்யமான விஷயம் தான். அப்படி ஒரு ஆச்சர்யத்தை இயக்குநர் அட்லீ நிகழ்த்தியிருக்கிறார்.

 

‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநரான அட்லீ, ‘தெறி’, ‘மெர்சல்’ இன்று வெளியாக உள்ள ‘பிகில்’ என்று விஜயை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியிருக்கிறார். மெர்சல் படத்திற்கு இவருக்கு ரூ.17 கோடி சம்பளம் என்று தகவல் வெளியான நிலையில், ‘பிகில்’ படத்திற்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அட்லீயின் சம்பளம் குறித்து வெளியாகும் தகவல் உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், அட்லீ வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார். அதுவும் முன்னாள் முதலமைச்சர் வீடு இருக்கும் இடத்தில்.

 

ஆம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வீடு இருக்கும் போயஸ் கார்டன் பகுதியில், ஜெயலலிதா வீடு அருகே அட்லீ வீடு ஒன்றை வாங்கியிருக்கிராராம். அந்த வீட்டின் விலை ரூ.20 கோடியாம். மேலும், அந்த வீட்டில் உள்ள தரை தளத்தில் மார்பல் மாற்றுவதற்காக மட்டுமே ரூ.2 கோடி செலவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

குறுகிய காலத்தில் இயக்குநர் ஒருவர் இப்படிப்பட்ட ஆடம்பரமான வீடு வாங்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக கருதப்படும் கோலிவுட்டில், இயக்குநர் அட்லீயின் இந்த அசுர வளர்ச்சியைப் பார்த்து திரையுலக பிரபலங்கள் வியப்படைந்திருக்கிறார்களாம்.