Jun 19, 2020 05:46 AM

’அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குநர் சச்சி மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

’அய்யப்பனும் கோஷியும்’ பட இயக்குநர் சச்சி மரணம்! - அதிர்ச்சியில் திரையுலகம்

கடந்த சில நாட்களாக திரையுலக மரணங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். மேலும், கடந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துக் கொண்டார்.

 

இப்படி இளம் வயதிலேயே பிரபல சினிமா பிரபலங்கள் மரணமடைந்தது சினிமா துறையை பெரும் கவலையடைய செய்த நிலயில், கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற மலையாளப் படம் ‘அய்யப்பனும் கோஷியும்’ இயக்குநர் சச்சி மரணம் அடைந்திருப்பது திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

மலையாள சினிமாவில் பிரபல திரைக்கதையாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நாடக நடிகர் என பன்முகத் திறமைக் கொண்ட கே.ஆர்.சச்சிதாநந்தன் என்ற சச்சி, கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலன் இன்றி இயக்குநர் சச்சி உயிரிழந்தார். 

 

Director Sachy

 

மலையாள சினிமாவின் சமீபத்திய பிரம்மாண்டமான வெற்றிப் படமாக இவர் இயக்கிய ‘அய்யப்பனும் கோஷியும்’ உள்ளது. பிரித்விராஜ், பிஜு மேனான் ஆகியோரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது.