’சாஹோ’ படத்திற்கு வந்த பரிதாப நிலை! - அதிர்ச்சியில் பிரபாஸ்

‘பாகுபலி’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான பிரபாஸின் ‘பாகுபலி 2’ ஆந்திராவில் மட்டும் இன்றி இந்தியா முழுவதும் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியது. தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ.150 கோடி வரை வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை இதுவரை வேறு எந்த படமும் முறியக்கவில்லை என்று கூறப்படுறது.
இப்படி, நாடு முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரபாஸை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் மீண்டும் படம் தயாரித்திருக்கிறார்கள். ‘சாஹோ’ என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ.350 கோடி என்று தயாரிப்பு தரப்பு கூறியிருக்கிறது.
இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கான புக்கிங் துவங்கி, இன்னும் 10 காட்சிகள் கூட புல் ஆகவில்லையாம். இதனால், பிரபாஸ் உள்ளிட்ட மொத்த ‘சாஹோ’ குழுவும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இத்தனைக்கும் விளம்பர நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஹீரோ பிரபாஸ், ஹீரோயின் ஷரத்தா கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டாலும், இப்படி ஒரு படம் வெளியாவது பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாமல் போனது தான், இந்த நிலைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
350 கோடி ரூபாயில் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர், அப்படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான விளம்பரங்களை சரியாக கையாளமால், தெலுங்கில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும், பிரபாஸ் ரசிகர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
எது எப்படியோ, படம் ரிலீஸான பிறகு தான் தெரியும் ‘சாஹோ’ சரித்திரம் படைக்கிறதா, இல்லை ஸ்வாகா ஆகிறதா, என்று. பொருத்திருந்து பார்ப்போம்.