Aug 25, 2019 08:27 AM

கஞ்சா போதைக்கு அடிமையான பாக்யராஜ்! - திரையுலகினர் அதிர்ச்சி

கஞ்சா போதைக்கு அடிமையான பாக்யராஜ்! - திரையுலகினர் அதிர்ச்சி

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் கஞ்சா போதைக்கு அடிமையாக இருந்த தகவலால் திரையுலகினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

‘கோலா’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட கே.பாக்யராஜ், தான் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா போதைக்கு அடிமையானதாக, கூறினார்.

 

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லாவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறிய பிறகு எல்லாரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். லைப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே. ஆனால் இப்படி இருக்கோமே என்று அன்று தான் தோன்றியது. புத்தருக்கு போதி மரம் மாதிரி எனக்கு போதை மரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்.” என்றார்.

 

பாக்யராஜின் இந்த பேச்சை கேட்டு அவரது ரசிகர்களும், தமிழ் திரையுலகினரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.