ரஜினியை தலைவராக ஏற்றுக்கொண்ட பாரதிராஜா!

இயக்குநர் பாரதிராஜாவுக்கும், நடிகர் ரஜினிகாந்துக்கும் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகளுடம், மோதல்களும் தொடர்ந்துக் கொண்டிருந்தாலும், பாரதிராஜா ரஜினிகாந்தை தலைவராக ஏற்றுக் கொண்ட தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கதையாசிரியர் கலைஞானத்திற்கு நேற்று சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், கதையாசிரியர் கலைஞானம் வாடகை வீட்டில் வசிக்கும் தகவல் எனக்கு இப்போது தான் தெரியும். அவருக்கு நான் வீடு வாங்கி கொடுப்பேன், என்று கூறினார்.
மேலும், பாரதிராஜா என்ன தனிமையில் சந்திக்கும் போது தலைவர் என்று தான் அழைப்பார். பாரதிராஜாவுக்கும் எனக்கும் கருத்துகள், எண்ணங்கள் மாறுபடலாம், ஆனால் நட்பு மாறாது, என்றும் கூறினார்.