Jul 26, 2018 04:30 AM

விஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் பாரதிராஜா!

விஜய் சேதுபதி படத்தில் இயக்குநர் பாரதிராஜா!

’ஓம்’ என்ற படத்தை இயக்கி கதையின் நாயகனாக நடித்து வரும் பாரதிராஜா, சமீபத்தில் அப்படத்தின் டீசரை வெளியிட்டார். தன்னுடைய படங்களில் நடிப்பதுடன், பிற இயக்குநர்களின் படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

 

அந்த வகையில் கடந்த ஆண்டு அவர் நடித்த ‘குரங்கு பொம்மை’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அதில் அவரது நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ படத்திலும் பாராதிராஜா நடித்திருக்கிறார். அப்பா மகன் என இரண்டு வித்தியாசமான வேடங்களில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இப்படத்தில் பாரதிராஜா இயக்குநராகவே கெஸ்ட் ரோலில் வந்து போகிறாராம்.

 

Seethakathi

 

மேலும், இயக்குநர் மகேந்திரன், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிதிதிருக்கிறார்கள். 

 

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கியிருக்கும் இப்படத்தை பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.