சிம்புக்கு வில்லனாகும் பாரதிராஜா!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க இருந்த நிலையில், சில காரணங்களால ஜூன் மாதம் தள்ளி போயுள்ளது.
இதற்கிடையே, படத்தில் வில்லனாக இயக்குநர் வெங்கட் பிரபுவின் தந்தையும், இயக்குநருமான கங்கை அமரன் நடிப்பதாக தகவல் வெளியாக, அதை இயக்குநர் வெங்கட் பிரபு மறுத்தார்.
இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தில் வில்லனாக பாரதிராஜா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, பாரதிராஜா நடிப்பது உண்மை தான், ஆனால் அவர் வில்லனாக நடிக்கவில்லை, என்று விளக்கம் அளித்துள்ளார்.
ஏற்கனவே, மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தில் பாரதிராஜா அரசியல் வில்லனாக நடித்திருந்ததால், அவரை மீண்டும் அரசியல் வில்லனாக நடிக்க வைத்தால், அப்படத்தின் சாயல் வந்துவிடும் என்பதாலேயே அவரை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க இயக்குநர் வெங்கட் பிரபு யோசிக்கிறாராம். இருந்தாலும், பாரதிராஜாவுக்கு ஹீரோவுக்கு நிகரான வேடமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.