’பிக் பாஸ் 4’ அப்டேட்! - இந்த வாரம் இவர் வெளியேற, அவர் வரப்போகிறார்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி 25 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் நபராக நடிகை ரேகா வெளியேறிய நிலையில், இந்த வாரம் ஒருவர் வெளியேறப் போகிறார். அவர் யார்? என்று அறிந்துக் கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாடகர் வேல்முருகன் வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், பாடகி சுசித்ரா போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி தொடங்கி சுமார் நான்கு வாரங்கள் கடந்திருக்கும் நிலையில், பிக் பாஸ் போட்டியின் ஹைலைட்டான காதல் கலாட்டா இதுவரை தொடங்காத நிலையில், இந்த வாரத்தில் இருந்து காதல் எப்பிசோட் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அநேகமாக, பாலாஜி மற்றும் ஷிவாணி இடையே தான் காதல் கசமுசா ஏற்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.