Sep 24, 2019 03:37 AM

ஏமாற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

ஏமாற்றப்பட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 90 நாட்களை கடந்திருப்பதால் போட்டி முடிய இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்றன. தற்போது முகேன் இறுதிப் போட்டிக்கு தேர்வாகிவிட்டதால், மற்ற இரண்டு இறுதிப் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள், என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வமகாக இருக்கிறார்கள்.

 

இதற்கிடையே, கடந்த வாரம் போலவே இந்த வாரமும் போட்டியாளர்களுக்கு பலவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த டாஸ்க்குகள் மூலமாகவே இறுதிப் போட்டிக்கான மற்ற இரண்டு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். ரசிகர்களின் வாக்குகளும் கணக்கெடுத்து கொள்ளப்பட உள்ளதாம்.

 

இந்த நிலையில், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலை தயார் செய்வதற்காக கூறிய பிக் பாஸ், போட்டியாளர்களிடம், அவர்கள் காப்பாற்ற நினைக்கும் போட்டியாளர் குறித்து கேட்டார். அப்படி அவர் ஒருவரை காப்பாற்ற நினைத்தால் அதற்காக பச்சை மிளகாய் ஒன்றை சாப்பிட வேண்டும் என்றும் இரண்டு பேர் என்றால் இன்னொரு பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும், என்று கூறினார்.

 

அதன்படி, ஷெரீன் மற்றும் சாண்டிக்காக இரண்டு பச்சை மிளகாயை தர்ஷன் சாப்பிட, கவின் லொஸ்லியாவுக்காகவும், லொஸ்லியா கவினுக்காகவும் பச்சை மிளகாய் சாப்பிட, ஷெரின் தர்ஷனுக்காக பச்சை மிளகாய் சாப்பிட்டார். முகேன் மூன்று பச்சை மிளகாய் சாப்பிட்டார்.

 

இறுதியாக இந்த வாரத்திற்கான எலிமினேஷன் பட்டியலை வெளியிட்ட பிக் பாஸ், “இது 16 வாரம் என்பதால் முகேனை தவிர மற்ற அனைவரும் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறீர்கள், நீங்கள் பச்சை மிளகாய் சாப்பிட்டதே தவறு” என்று கூறி அவர்களை ஏமாற்ற, போட்டியாளர்கள் பச்சை மிளகாய் சாப்பிட்ட காரத்தால் கண்ணீர் விட்டு சத்தம் போட்டார்கள்.