Oct 02, 2019 06:32 PM

முன்னணி இயக்குநர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் தர்ஷன்!

முன்னணி இயக்குநர் படத்தில் கமிட்டான பிக் பாஸ் தர்ஷன்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிய உள்ள நிலையில், எஞ்சியுள்ள சில தினங்களில் என்ன செய்வதென்று தெரியாமல் நிகழ்ச்சியாளர்கள் வனிதாவை வர வைத்து, வம்பு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

தற்போது இருக்கும் முகேன், சாண்டி, ஷெரீன் மற்றும் லொஸ்லியா ஆகிய நான்கு பேரை விட பிக் பாஸ் டைடிலை வெல்வார் என்று அதிகம் பேர் யூகித்தது தர்ஷனை தான். ஏன், தற்போது இருக்கும் இறுதி போட்டியாளர்களே தர்ஷன் தான் டைடிலை வெல்வார் என்று கூறினார்கள். ஆனால், அவர் திடீரென்று வெளியேறியது பலருக்கு அதிர்ச்சியளித்தது.

 

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன், திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

எப்போதும் போல இது வதந்தியாக இருக்கவும் வார்ய்ப்பு இருக்கிறது. அதேபோல் இது உண்மையாவதற்கும் நிறைய வாய்ப்புகள்ளது என்று கூறப்படுகிறது. காரணம், இந்தியன் 2 படத்தில் கல்லூரி மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால், தர்ஷன் படத்தில் கல்லூரி மாணவராகவோ அல்லது மீடியாவில் இருக்கும் இளைஞராகவும் நடிக்கலாம் என்றும் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.