பிக் பாஸ் தர்ஷனுக்கு கிடைத்த புது பரிசு!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்திருக்கும் மாடல் தர்ஷன், தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டியின் மூலம் சிக்கலில் சிக்கியுள்ளார்.
தர்ஷன் பிக் பாஸ் போட்டியில் இருக்கும் போதே, தானும் அவரும் காதலிப்பதாக கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் பற்றி பல பேட்டிகள் கொடுத்து வந்தார். பிறகு பிக் பாஸ் முடிந்ததும், சில நிகழ்ச்சிகளில் தர்ஷனும், சனமும் ஒன்றாக கலந்துக் கொண்ட நிலையில், திடீரென்று தர்ஷன் மீது சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்தார். தனக்கும் தர்ஷனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டது. ஆனால், தர்ஷன் தன்னை திருமணம் செய்துக் கொள்ள மறுக்கிறார், என்று புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சனம் ஷெட்டி மீது தர்ஷனும் பல திடுக்கிடும் புகார்களை கூறினார். இப்படி இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே, சனம் ஷெட்டியின் பிரச்சினையை ஓரம் ஒதுக்கிவைத்துவிட்டு தனது வேலையில் பிஸியாக இருக்கும் தர்ஷனுக்கு புதிய பரிசு ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது பல்வேறு டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டது. அதில், ஒரு டாஸ்க்கில் வெற்றி பெறுபவர்களுக்கு யமஹா பைக் ஒன்று பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த டாஸ்க்கில் தர்ஷன் தான் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், பைக் டாஸ்க்கில் வெற்றி பெற்ற தர்ஷனுக்கு தற்போது யமஹா ஹிறுவனம் லேட்டஸ் மாடல் பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது. அந்த பைக்கின் புகைப்படத்தை வெளியிட்டு தர்ஷன், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இதோ அந்த பரிசு பைக்,