முன்னணி நடிகர் படத்தில் உதவி இயக்குநரான பிக் பாஸ் கவின்!

‘பீட்சா’, ‘இன்று நேற்று நாளை’, ‘சத்ரியன்’ உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த கவின், ‘சரவணன் மீனாட்சி’ தொலைக்காட்சி தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானார். அதையடுத்து, ‘நட்புனா என்னானு தெரியுமா” படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக கலந்துக் கொண்டதால், தமிழகத்தின் பட்டிதொட்டி மட்டும் இன்றி உலக தமிழர்களிடமும் பிரபலமாகிவிட்டார்.
தற்போது ‘லிப்ட்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் கவினுக்கு மேலும் சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அதையெல்லாம் நிராகரித்துவிட்டு முன்னணி நடிகர் ஒருவரது படத்தில் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கியிருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தில் கவின், உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தற்போது அப்படத்தின் இயக்குநர் சிவகார்த்திகேயனை வைத்து ‘டாக்டர்’ என்ற படத்தை இயக்க, இப்படத்திலும் கவின் உதவி இயக்குநராக பணியாற்ற தொடங்கியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கவின் இருக்கும் புகைப்படம் வெளியானதால், அவர் ‘டாக்டர்’ படத்தில் நடிக்கிறார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், உண்மையில் அவர் அந்த படத்தில் நடிக்கவில்லையாம். உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறாராம்.