பிக் பாஸ் லொஸ்லியா நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் ரிலீஸ்!

பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்களிடம் பிரபலமானவர் லொஸ்லியா. இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் பிக் பாஸின் பேவரைட் போட்டியாளராக வலம் வந்ததோடு, அப்போட்டியின் முக்கியமான போட்டியாளராகவும் திகழ்ந்தார். இவருக்கும் கவினுக்கும் இடையே இருந்த காதல் எப்பிசோட்கள் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகியது என்றால் அது மிகையாகாது.
மேலும், மற்றொரு போட்டியாளரான இயக்குநர் சேரனை, “அப்பா..” என்று அழைத்தபடி இருந்ததும், பிறகு நிஜ அப்பாவின் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து திட்டியதும், கதறி அழுதது, என லொஸ்லியாவால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிக் பாஸ் போட்டி முடிந்ததும் சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்டிய லொஸ்லியா, தற்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்திற்கு ‘பிரண்ட்ஷிப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கொரோனா பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், படத்தின் பின்னணி வேலைகள் சில நடந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரண்ட்ஷிப் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதும் லொஸ்லியா ஆர்மியினர் குஷியடைந்தனர். அதன்படி, இன்று 5 மணிக்கு பிரண்ட்ஷிப் படத்தின் பஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. தற்போது இதனை லொஸ்லியா ஆர்மி கொண்டாடி வருகிறது.
இதோ அந்த போஸ்டர்,