பிக் பாஸ் மீரா மிதுனின் கணவர் புகைப்படம் வெளியானது!

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 யின் முக்கிய போட்டியாளராக திகழும் மீரா மிதுன், தனது அடாவடியான செயலால் நிகழ்ச்சியின் டிஆர்பி உயர்த்தி வருகிறார். பிக் பாஸ் வீட்டில் அவ்வபோது இவரால் சில சர்ச்சையான விஷயங்களும் நடக்கிறது.
திருமணம் ஆனதை மறைத்து மிஸ் தென்னிந்தியா போட்டியில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மீரா மிதுனிடம் இருந்து சமீபத்தில் பட்டம் பறிக்கப்பட்ட நிலையில், தான் திருமணமாகி கணவருடன் மூன்று நாட்கள் மட்டுமே வாழ்ந்ததாகவும், அவர் ஒரு சைக்கோ என்பதால் அவரை விட்டு பிரிந்துவிட்டேன், என்றும் மீரா மிதுன் கூறி வருகிறார்.
ஆனால், மீரா மிதுனின் உறவினர் ஒருவர் இதை மறுத்ததோடு, மீரா மிதுன் திருமணமாகி இரண்டு வருடங்கள் கணவருடன் வாழ்ந்ததாக கூறியிருப்பதோடு, மீரா மிதுன் தான் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மீரா மிதுன் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுவரை எங்கும் வெளியாகத அந்த புகைப்படம் இதோ,