Oct 10, 2019 04:04 AM
பிக் பாஸ் முகேனின் காதலி இவர்தான்! - வைரலாகும் புகைப்படங்கள் இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3-யின் டைடில் வின்னராக முகேன் ராவ் தேர்வு செய்யப்பட்டார். மலேசிய நாட்டைச் சேர்ந்த இவர், அங்கு பிரபல ஆல்பம் பாடகராக வலம் வருகிறார்.
இதற்கிடையே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் முகேனை, சக போட்டியாளரான அபிராமி காதலித்தார். ஆனால், அவரது காதலை நிராகரித்த முகேன், தனக்கு ஏற்கனவே காதலி இருப்பதாகவும், அவர் மலேசியாவில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால், முகேனின் காதலி யார், எப்படி இருப்பார், என்பதை தெரிந்துக்கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்ற முகேன், தற்போது தனது காதலியுடன் வலம் வர தொடங்கியுள்ளார்.
அவர் பெயர் நதியா. நடிப்பு மற்றும் மார்சியல் ஆர்ட்ஸ் ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் முகேனின் காதலி, நதியா இவர் தான்.