Aug 17, 2019 05:47 PM

பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’

பிக் பாஸ் போட்டியாளர்கள் நடிக்கும் ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’

பிக் பாஸ் போட்டியாளர்களான நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர் இணைந்து நடிக்கும் நடிக்கும் படத்திற்கு ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

 

‘தாதா 87’ படப்பிடிப்பில் இருக்கும் ‘பீட்ரு’ ஆகிய படங்களை இயக்கிய விஜய்ஸ்ரீ ஜி இயக்கும் இப்படத்தில், ஐஸ்வர்யா தத்தா, கதையின் நாயகியாக நடிக்க, இவருடன் ஐந்து கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பப்ஜி என்ற கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் க்ரைம் பிரான்ச் ஆபிஸராக நடிக்கிறார். ஜூலியும், தாதா கதிரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

பப்ஜி கேம் போல அஞ்சு பேரும் ஒரு கேம் விளையாடுகிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது. அது என்ன, அவர்களுக்கு என்ன நடக்கிறது, என்பது தான் படத்தின் கதை.

 

Big Boss Aishwarya Dutta

 

நடிக்காமல் ஒதுங்கியிருந்த பழைய நடிகர்களை இப்படத்தில் நடிக்க வைக்கும் திட்டத்தில் இருக்கும் இப்படத்தின் இயக்குநர், ஏற்கனவே ‘தாதா 87’ படத்தில் சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இருவரையும் நடிக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பல வருடங்களாக நடிப்புக்கு பிரேக் விட்டு நடிக்காமல் இருந்த அம்சவர்தனை வைத்து ‘பீட்ரு’ என்ற படத்தையும் இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்கி வருகிறார்.