Aug 15, 2019 06:47 PM

அஜித் படத்தில் கமிட்டான பிக் பாஸ் நடிகை!

அஜித் படத்தில் கமிட்டான பிக் பாஸ் நடிகை!

பிக் பாஸ் சீசன் 3 50 நாட்களை கடந்து பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. முகேன், அபிராமியின் காதல் சண்டையாக ஆரம்பித்து தற்போது வனிதா, முகேனின் அடிதடி சண்டையாக மாறியுள்ளது. இவர்களது சண்டைக்கு நடுவே, ஆண்கள், பெண்கள் என்று பிக் பாஸ் போட்டியாளர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர்.

 

இது ஒரு பக்கம் இருக்க, இந்த வாரம் பிக் பாஸில் இருந்து மதுமிதா எலிமினேட் ஆகப்போவதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், இது இன்னும் உறுதியாகவில்லை.

 

இந்த நிலையில், கடந்த வாரத்திற்கு முன் வாரம் பிக் பாஸ் இருந்து எலிமினேட் ஆன ரேஷ்மி, அஜித் படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார். அஜித்தின் 60 வது படமாக உருவாகும் இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், பிக் பாஸ் ரேஷ்மா இப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது.

 

Actress Reshma

 

ஏற்கனவே விஷ்ணு விஷாலின் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் மூலம் பிரபலமான ரேஷ்மா, அப்படத்திற்கு பிறகு சொல்லும்படியான படங்களில் நடிக்கவில்லை. அந்த குறையை போக்கும் அஜித் படம், அவருக்கு கோடம்பாக்கத்தில் நிரந்தரமான இடத்தை பெற்று தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.