'பிக் பாஸ் 3’ எப்போது தொடங்குகிறது? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் டிவி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதன் மூன்றாவது பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதை விஜய் டிவி ஏற்கனவே அறிவித்திருந்தாலும், நிகழ்ச்சி ஆரம்பிக்கும் தேதியை மட்டும் அறிவிக்காமல் இருந்தது.
மேலும், நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்பவர்களின் பட்டியல் அவ்வபோது வெளியானாலும், அதிலும் உறுதியான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. தற்போது காமெடி நடிகை மதுமிதா மட்டும் கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்ற அறிவிப்பை விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 23 ஆம் தேதியில் இருந்து பிக் பாஸ் சீசன் 3 ஒளிபரப்பு தொடங்க இருப்பதாக விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
இது வெறும் ஷோ அல்ல.. நம்ம லைஃப்.. 😎
— Vijay Television (@vijaytelevision) May 30, 2019
பிக்பாஸ் 3 - ஜூன் 23 முதல் உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #BiggBoss3 #KamalHaasan #VijayTelevision pic.twitter.com/s3zGzeDKwJ