’பிக் பாஸ் 3’ யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பட்டியல் வெளியானது!

ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசன் விரைவில் ஓளிபரப்பாவது உறுதியாகியுள்ளது. இந்த மூன்றாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, பிக் பாஸ் வீட்டில் மூன்றாம் சீசனுக்காக புரோமோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், போட்டியாளர்களாக சாந்தினி, சுதா சந்திரன், லைலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது போட்டியாளர்களின் முழு விபரம் என்று ஒரு பட்டியல் வெளியாகியுள்ளது.
இதோ அந்த பட்டியல்,
மிர்னாலினி
சாந்தினி
கஸ்தூரி
விசித்ரா
தொகுப்பாளினி ரம்யா
பூனம் பாஜ்வா
ரமேஷ் திலக்
சரண் ஷக்தி
பாலாஜி முருகதாஸ்
ஜாங்கிரி மதுமிதா
கிரிஷ்
பிக் பாஸ் சீசன் 3 யில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவர்கள் தான், என்று இந்த பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலானாலும், இது அதிகாரப்பூர்வமான பட்டியல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.