Mar 14, 2020 07:09 AM

’பிக் பாஸ் சீசன் 4’ அறிவிப்பு! - தொகுப்பாளர் மாற்றம்

’பிக் பாஸ் சீசன் 4’ அறிவிப்பு! - தொகுப்பாளர் மாற்றம்

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தியாவில் முதன் முதலாக இந்தி மொழியில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 13 சீசன்கள் முடிந்திருக்கும் நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மூன்று சீசன்கள் நிறைவு பெற்றிருக்கிறது.

 

தென்னிந்தியா முழுவதும் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் மக்களிடம் எளிதில் பிரபலமடைவதோடு, பல சினிமா வாய்ப்புகளை பெறுவதால், இப்போட்டியில் பங்கேற்க பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 

Kamal Hassan

 

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்று சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். ஆனால், தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆர், நானி, நாகர்ஜுனா என்று ஒவ்வொரு சீசனுக்கு ஒரு பிரபலம் என்று இதுவரை மூன்று பிரபலங்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், தெலுங்கு பிக் பாஸின் நான்காவது சீசன் வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதை, தெலுங்கு முன்னணி ஹீரோ மகேஷ் பாபு தொகுத்து வழங்க இருக்கிறார்.

 

Actor Mahesh Babu

 

அதேபோல், தமிழ் பிக் பாஸ் சீசன் 4 செப்டம்பர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தொகுப்பாளராக கமல் இருப்பாரா, அல்லது வேறு பிரபலம் தொகுத்து வழங்குவாரா, என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.