Jun 11, 2020 04:26 AM

’பிக் பாஸ் சீசன் 4’அறிவிப்பு! - தொகுப்பாளர் இவர் தான்

’பிக் பாஸ் சீசன் 4’அறிவிப்பு! - தொகுப்பாளர் இவர் தான்

ரசிகர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழில் மூன்று சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது. மூன்றாவது சீசன் மற்ற இரண்டு சீசன்களை விட மிகப்பெரிய வரவேற்பு பெற்றதால் நான்காவது சீசன் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

இதற்கிடையே, கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா? என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்த வருடம் பிக் பாஸ் நிச்சயம் நடக்கும் என்று விஜய் டிவி தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், கொரோனா பிரச்சினையால் இந்த ஆண்டு பிக் பாஸ் சற்று காலதாமதமாக தொடங்க இருப்பதாகவும், நிகழ்ச்சியில் பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

மேலும், அரசியலில் தீவிரம் காட்டும் கமல்ஹாசன், பிக் பாஸ் 4-வது சீசனை தொகுத்து வழங்க மாட்டார், என்ற தகவல் பரவியது. ஆனால், இதை மறுத்திருக்கும் விஜய் டிவி வட்டாரம், பிக் பாஸ் 4-வது சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்றும், அதற்கான கமல்ஹாசன் தயாராகி வருகிறார், என்றும் தெரிவித்துள்ளது.

 

Kamal Hassan in Big Boss 4

 

தற்போது போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், ‘பிக் பாஸ் சீசன் 4’ பற்றிய அதிகாரப்பூர்வ தகவலை விஜய் டிவி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.