Jul 27, 2019 07:33 AM

தலைகீழாக மாறிய பிக் பாஸ்! - இனி சேரன் தான் டாப்

தலைகீழாக மாறிய பிக் பாஸ்! - இனி சேரன் தான் டாப்

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 யின் நான்காவது எலிமினேஷன் ரவுண்ட் நாளை நடைபெற உள்ளது. சேரன், கவின், சாக்‌ஷி, அபிராமி, சரவணன் ஆகியோர் எலிமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்களில் யார் எலிமினேட் ஆகப்போவது யார்? என்பது நாளை தெரிந்துவிடும். அதே சமயம், எலிமினேட் ரவுண்டில் இருந்து தப்பிப்பது யார்? என்பது இன்று தெரிந்துவிடும். 

 

இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த வாரத்திற்கான எலிமினேட் போட்டியாளரை தேர்வு செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ரசிகர்களின் குறைவான வாக்குகளை பெற்றவர்களே எலிமினேட் ஆவார்கள் என்று கூறப்பட்டது. அதன்படி, இந்த பட்டியலில் ரசிகர்களின் அதிக வாக்குகளை பெற்று கவின் முதலிடத்திலும், சேரன் இரண்டாவது இடத்திலும் இருந்தார்கள். சாக்‌ஷி கடைசி இடத்தில் இருந்தார். இதனால், சாக்‌ஷி தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

 

இந்த நிலையில், பிக் பாஸில் நடைபெற்ற நாட்டாமை டாஸ்க்கின் போது சேரன் தனது இடுப்பை பிடித்து தூக்கினார், என மீரா புகார் கூறினார். இது ரசிகர்களிடமும், போட்டியாளர்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு போட்டியாளர்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவாக பேச தொடங்கியதும், அந்தர் பல்டி அடித்த மீரா, தான் அவ்வாறு கூறவே இல்லை, என மறுப்பு தெரிவித்தார். மீராவின் இந்த டகால்டி வேலையால் அவர் மீது பார்வையாளர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விட்டது.

 

Big Boss Nattamai Task

 

இதன் மூலம், நேற்று வரை எலிமினேட் வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் இருந்த சாக்‌ஷி ஒரு முடம் முன்னேற, மீராவோ கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டார். அதே சமயம், இரண்டாம் இடத்தில் இருந்த சேரன் முதலிடத்திற்கு முன்னேறிவிட்டார்.

 

ஆக, இனி பிக் பாஸ் வீட்டில் சேரன் தான் டாப்!

 

Big Boss Vote New