Oct 01, 2019 05:15 AM

பிக் பாஸில் பங்கேற்க பிரபல நடிகைக்கு ரூ.120 கோடி சம்பளம்!

பிக் பாஸில் பங்கேற்க பிரபல நடிகைக்கு ரூ.120 கோடி சம்பளம்!

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 இன்னும் சில நாட்களில் முடிய உள்ளது. இதனால், இதன் வெற்றியாளர்கள் யார்? என்பதை அறிந்துக் கொள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில், பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை விரைவில் தொடங்க இப்போதே டிவி சேனல் நிர்வாகம் முடிவு செய்துவிட்டதாம். இந்த நான்காவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்குகிறார். தற்போது இந்த நிகழ்வில் போட்டியாளராக பங்கேற்கும் பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பதாகவும், இதுவரை ஒளிபரப்பான மூன்று சீசன்களை விட, இந்த நான்காவது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மக்களிடம் ஏற்கனவே பெரிய அளவில் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும், என்பதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்களாம். இதற்காக பெரிய தொகையை சம்பளமாகவும் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

 

இதற்கிடையே, கடந்த 29 ஆம் தேதியில் இருந்து இந்தியில் பிக் பாஸ் சீசன் 13 ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொள்ள பாலிவுட் நடிகை ஒருவருக்கு ரூ.120 கோடி சம்பளம் கொடுக்க பிக் பாஸ் குழு முன் வந்திருக்கிறதாம்.

 

இந்தி டிவி மற்றும் சினிமாவில் பிரபலமான நடிகையாக ரஷாமி தேசாய் தான் அந்த நடிகை. இவர் ஏற்கனவே, திருமணமாகி விவாகரத்து பெற்ற நிலையில், தற்போது அர்ஹான் கானை காதலித்து வருகிறார். இவர்களது காதல் கசமுசாக்கள் பாலிவுட்டில் படு வைரலான விஷயமாக இருப்பதால், இவர்கள் இருவரையும் ஒன்றாக இந்தி பிக் பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்க முயற்சிக்கிறார்களாம். 

 

Actress Rashami Thesay

 

அதற்காக நடிகை ரூ.120 கோடி சம்பளம் கேட்க, அதை கொடுக்க நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்களாம்.