Dec 13, 2019 02:59 AM

ஹீரோவான பிக் பாஸ் தர்ஷன்! - பஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படம் இதோ

ஹீரோவான பிக் பாஸ் தர்ஷன்! - பஸ்ட் லுக் போஸ்டருக்கான புகைப்படம் இதோ

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் பேவரைட் போட்டியாளராக இருந்தவர் தர்ஷன். இலங்கையை சேர்ந்தவரான இவர் தான் டைடிலை வெல்வார் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இவரால் இரண்டாம் இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.

 

இருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்ததோடு, சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.

 

தற்போது நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தர்ஷன் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

 

இந்த நிலையில், தர்ஷன் முற்றிலும் மாறுபட்ட ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படத்தையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தர்ஷன், “Coming Soon..." என்றும் பதிவிட்டுள்ளார்.

 

தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் போட்டோ ஷூட்டாக, இது இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே, தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் பஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.