May 14, 2019 05:08 AM

’செம்பருத்தி’ சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்!

’செம்பருத்தி’ சீரியலில் நடந்த அதிரடி மாற்றம்!

பெண்கள் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த சீரியலை தற்போது ஆண்கள் மற்றும் இளைஞர்களும் பார்க்ககூடிய அளவுக்கு படு பிரம்மாண்டமாகவும், யூத் புல்லாகவும் எடுக்க தொடங்கிவிட்டார்கள். இதனால், தற்போது பல சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் திரைப்படங்களுக்கு நிகராக இருக்கின்றன.

 

அந்த வகையில், ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியல் தான் இன்றைக்கு டாப் சீரியலாக இருப்பதோடி, டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

 

இந்த நிலையில், இந்த சீரியலில் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அதாவது, சீரியல் இயக்குநர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.

 

இதுநாள் வரை ‘செம்பருத்தி’ சீரியலை சுலைமான் என்பவர் இயக்கி வந்த நிலையில், தற்போது நீராவிப்பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார். 

 

இந்த மாற்றத்திற்கான காரணம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அதே சமயம், இயக்குநர் மாறினால் என்ன, சீரியல் நல்லபடியாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது, என்று சேனல் நிர்வாகமும் இதை சத்தமில்லாமல் செய்திருக்கிறது.