பிக் பாஸ் வீட்டில் முதல் நாளே தொடங்கிய சண்டை! - யாரால் தெரியுமா?

டிவி நிகழ்ச்சிகளில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நிகழ்ச்சியான பிக் பாஸின் மூன்றாவது சீசன் நேற்று துவங்கியது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அமசமே போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள் தான். அந்த வகையில், முதல் நாளான இன்றே போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
இன்று காலை இன்றை நாளில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றிய புரோமோ ஒன்றை வெளியிட்ட விஜய் டிவி நிர்வாகம், இன்று வெளியிட்ட இரண்டாம் புரோமோவில், போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தை ஒளிபரப்பியதால் நிகழ்ச்சி சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அதாவது, கமல்ஹாசன் தண்ணீர் சிக்கனம் குறித்து பிக் பாஸ் போட்டியாளர்களிடம் பேச, அதற்கு போட்டியாளர்கள், கை தட்டி வரவேற்றனர்.
உடனே, குறுக்கிட்ட பாத்திமா பாபு, இது கை தட்டி வரவேற்கும் விஷமில்லை, என்று கூறினார். உடனே அவருக்கு பதில் அளித்த சேரன், ஏன் இதை வரவேற்க கைதட்டுவதில் என்ன தவறு, என்று கேட்க, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் தொடங்கியது.
இப்படிப்பட்ட புரோமோவை வெளியிட்டிருக்கும் விஜய் டிவி, பிக் பாஸ் வீட்டுக்கள் முதல் நாளே சண்டை தொடங்கிவிட்டது, என்பதை சூசகமாக தெரிவித்துள்ளது.
#பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5tD1s5Dk6W
— Vijay Television (@vijaytelevision) June 24, 2019