May 25, 2019 09:58 AM

அஜித்துக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து!

அஜித்துக்கு காத்திருக்கும் மிகப்பெரிய விருந்து!

அஜித் நடிப்பில் ‘விஸ்வாசம்’ பெற்ற வெற்றியால் அவரது அடுத்தப் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. எச்.வினோத் இயக்கத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை முடித்திருக்கும் அஜித், அடுத்ததாக வினோத் இயக்கத்திலேயே நடிக்கிறார். அதற்குப் பிறகு பாலிவுட்டில் அஜித் எண்ட்ரிக்கொடுக்க உள்ளார்.

 

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தயாரித்திருக்கும் போனி கபூர், தான் அஜித்தின் அடுத்தப் படத்தையும், அவரது பாலிவுட் படத்தையும் தயாரிக்க இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அறியாதது அஜித்துக்காக மிகப்பெரிய விருந்து ஒன்று காத்திருக்கிறது.

 

பொதுவாக ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், அப்படத்தில் பணியாற்றியவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தும் அஜித்தை தயாரிப்பாளர் போனி கபூர் விருந்து வைத்து அசத்த இருக்கிறார். காரணம், தனது படத்தில் பணியாற்றும் நடிகர்களை விருந்து வைத்து அசத்துவதில் போனி கபூர் கிங்காம்.

 

தனது முதல் படமான ‘ஹம் பாஞ்ச்’ முதல் சமீபத்திய ‘மாம்’ வரை தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு மிகச்சிறந்த விருந்தோம்பலை போனி கபூர் அளித்து வருகிறார்.

 

Bhoni Kapoor

 

1979-80 களில் போனி கபூர் தயாரித்த முதல் திரைப்படமான ‘ஹம் பாஞ்ச்’ படத்தின் படப்பிடிப்பின் போது, தனது நடிகர்களுக்கு உணவு பரிமாறியிருக்கிறார். அதற்கும் மேலாக, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் ஹோட்டல் இல்லாத காரணத்தால், அங்கிருந்து அருகில் இருக்கும் ஹோட்டலுக்கு 100 மைல்கள் தூரம் செல்ல வேண்டும் என்பதாலும்  கழிவறைகளுடன் கூடிய காட்டேஜ்களை கட்டினார். சினிமா பார்க்க தியேட்டர், உள்விளையாட்டுகளுக்கு என தனியாக இரண்டு காட்டேஜ்களை அமைத்தார். பேட்மின்டன் கோர்ட் மற்றும் நடிகர், நடிகைகள் பொழுதுபோக்குக்கு 40 வேறுபட்ட திரைப்படங்களையும் தேர்வு செய்து வைத்திருந்தார்.

 

Bhoni Kapoor

 

அப்படி போனி கபூர் அளித்த விருந்தில் நடிகர்கள் சஞ்சீவ் குமார், மிதுன் சக்ரபோர்த்தி, ராஜ் பாப்பர், குல்ஸன் குரோவர், ரஞ்சித் சூட், ஏ.கே.ஹங்கல் மற்றும் உதய் சந்திரா ஆகியோர் சேர்ந்து சாப்பிடும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

 

மேலும், ஸ்ரீதேவின் 300 வது படமும், தற்போது சீனாவில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்த ‘மாம்’ படப்பிடிப்பின் போது ஜார்ஜியாவின் பனி மலைகள் மீது படக்குழுவினருக்கு போனி கபூர் அசத்தலான விருந்து வைத்திருக்கிறார்.

 

Bhoni Kapoor in Mom shooting

 

இப்படி தனது ஒவ்வொரு படங்களில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருந்து வைத்து அசத்தும் போனி கபூர், தமிழ் சினிமாவின் தலயாக இருக்கும் அஜித்துக்கும் விரைவில் அசத்தலான விருந்து வைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Bhoni Kapoor in Mom shooting