Jul 03, 2019 07:11 AM

விஜய்க்காக உருவாகும் பிரம்மாண்ட அரசியல் படம்! - ரெடியாகும் மாஸ் கூட்டணி

விஜய்க்காக உருவாகும் பிரம்மாண்ட அரசியல் படம்! - ரெடியாகும் மாஸ் கூட்டணி

அட்லீ இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வரும் விஜய், அப்படத்திற்குப் பிறகு ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதன் பிறகு விஜயின் 65 வது படம் பிரம்மாண்டமான அரசியல் படமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களில் விஜய் பேசிய அரசியல் வசனங்களும், காட்சிகளும் சர்ச்சையில் சிக்கினாலும், படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தமிழகத்தை தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களில் படம் வெற்றிகரமாக ஓடியது.

 

இதற்கிடையே, விஜய் தொடர்ந்து தனது படங்களில் அரசியல் பேசி வருவதால் அவரது படங்கள் இந்திய அளவில் கவனிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ‘பிகில்’ படம் விளையாட்டுத் துறையில் உள்ள மோசடிகளையும், ஊழல்களைப் பற்றியும் பேசுகிற படமாக உருவாகி வருவதால், அப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், விஜய் தனது 65 வது படத்திற்காக இயக்குநர் ஷங்கருடன் கூட்டணி அமைக்க இருப்பதாகவும், இவர்களது கூட்டணியில் ‘முதல்வன் 2’ படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் படத்தில் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி, தனது அதிரடியான நடவடிக்கைகள் மூலம் அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் கலங்கடிக்கும் காட்சிகள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

 

Director Shankar

 

தற்போது ஷங்கர் இயக்க இருக்கும் ‘முதல்வன் 2’ வில் விஜய் முதல்வர் வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் முதல்வனில் ஹீரோவாக நடித்த அர்ஜுன், முதல்வன் 2 வில் வில்லனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.