May 17, 2020 04:21 AM

பிக் பாஸ் தர்ஷனுக்காக காத்திருக்கும் வெற்றி! - முதல் படத்திலேயே அடித்த லக்

பிக் பாஸ் தர்ஷனுக்காக காத்திருக்கும் வெற்றி! - முதல் படத்திலேயே அடித்த லக்

இலங்கையை சேர்ந்த தமிழரான தர்ஷன், அங்கு பிரபல மாடலாகவும் வலம் வருகிறார். பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்தவர், பிக் பாஸ் சீசன் 3-யில் போட்டியாளராக பங்கேற்றதால், தற்போது தமிழகத்தின் மூளை முடுக்கெல்லாம் தெரிந்த முகமாகிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பேவரைட் போட்டியாளாக திகழ்ந்த தர்ஷன், தற்போது திரைப்படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கிறார்.

 

சில ஹீரோக்களுக்கு முதல் படமே மிகப்பெரிய படமாக அமையும். அந்த வகையில், பிக் பாஸ் தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்ட படமாக உருவாகிறதாம். தற்போது இருக்கும் கொரோனா பிரச்சினை காரணமாக படப்பிடிபு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், தர்ஷன் படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் தர்ஷனின் முதல் படத்தில் பணியாற்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அனிருத் பாடல்களுக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் சில படங்களும், விஜய் சேதுபதியின் கம்பேக் படமான ‘நானும் ரவுடி தான்’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அனிருத்தின் பாடல்களும் ஒரு காரணம். அந்த வகையில், தர்ஷனின் முதல் படத்திற்கு அனிருத் இசையமைப்பதால், தர்ஷனுக்கு பெரிய வெற்றிகாத்திருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.

 

ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் கருணாமூர்த்தி தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் இயக்குகிறார். கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு படத்தின் முழு விவரங்களை படக்குழு அறிவிக்க இருக்கிறார்களாம்.