Sep 09, 2019 05:50 AM

பிக் பாஸில் அதிரடி திருப்பம்! - சேரனுக்கு கைகொடுத்த கமல்ஹாசன்

பிக் பாஸில் அதிரடி திருப்பம்! - சேரனுக்கு கைகொடுத்த கமல்ஹாசன்

பிக் பாஸ் சீசன் 3 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது ஒரு பக்கம் இருக்க, நிகழ்ச்சியில் கடந்த வாரம் சேரன் எலிமினேட் ஆனது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. அதே சமயம் அவர் சீக்ரெட் ரூம் வேண்டும் என்று கேட்டதால், அவருக்கு சீக்ரெட் ரூம் கொடுக்கப்பட்டது.

 

இதனையடுத்து சேரன் பிக் பாஸ் போட்டியில் தொடர்வாரா அல்லது வெளியேற்றப்படுவாரா, என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்க, சேரனுக்கு கமல்ஹாசன் கைகொடுத்திருக்கிறார். ஆம், சேரன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்கிறார். அவர் மீண்டும் போட்டியில் பங்கேற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அத்துடன், பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சீனியர்களை முதலில் வெளியேற்றி வருவதால் ரசிகர்களும் அதிர்ப்தியடைந்திருக்கிறார்கள்.

 

கஸ்தூரி, மோகன் வைத்யா, பாத்திமா பாபு தற்போது சேரன் வெளியேற்றப்பட்டது, என்று தொடர்ந்து சீனியர்கள் மட்டுமே டார்க்கெட் செய்யப்படுவதாகவும், காதல் போன்ற கசமுசாவை உருவாக்கும் இளசுகளை போட்டியின் கடைசி வரை வைத்திருப்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் திட்டம், என்றும் மக்கள் குற்றம் சாட்டியிருகிறார்கள்.

 

எது எப்படியோ, எந்தவித சர்ச்சைக்குள்ளும் சிக்காமல், போட்டியின் ஆரம்பத்தில் இருந்து நேர்மையாக விளையாடி வரும் சேரன், வெளியேற்றப்பட்டு பிறகு சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு, தற்போது மீண்டும் போட்டியாளராக பங்கேற்றிருப்பது பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்திருக்கிறது.

 

சேரன் இப்படி மீண்டும் போட்டியில் பங்கேற்றிருப்பதால், பிக் பாஸ் போட்டி மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது.