Sep 08, 2019 07:19 AM
சேரன் விஷயத்தில் நடந்த திடீர் திருப்பம்! - பிக் பாஸ் செய்தது இதுதான்

பிக் பாஸ் நிகழ்ச்சி 80 நாட்களை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் போடியாளர்களுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வாரம் எலிமினேஷன் பட்டியலில் கவின், லொஸ்லியா, தர்ஷன், சேரன், ஷெரின் ஆகியோர் இடம்பெற்றிருந்த நிலையில், சேரன் வெளியேற்றப்பட்டதாக நேற்று தகவல் பரவியது.
இளைஞரகளுடன் சமமாக போட்டி போடும் சேரன், யாரையும் துன்புறுத்தாமல் போட்டியில் பங்கேற்று வரும் நிலையில், அவர் வெளியேற்ற தகவல் பலரையும் அதிர்ச்சியடைய் செய்தது.
ஆனால், சேரன் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அவர் சீக்ரெட் அறை வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். அதனால், தற்போது சேரனுக்கு சீக்ரெட் அறை வழங்கப்பட்டுள்ளது.
அதனால், நேற்று சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.