Oct 06, 2019 06:18 AM

காதலை வெளிப்படுத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்! - அதிர்ந்த விழா மேடை

காதலை வெளிப்படுத்திய பிக் பாஸ் போட்டியாளர்கள்! - அதிர்ந்த விழா மேடை

தமிழ் பிக் பாஸ் சீசன் 3 இன்றுடன் முடிவடைய உள்ளது. இதில் வெற்றியாளராக முகேன் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது. அதேபோல், லொஸ்லியா, கவின் இடையிலான காதல் அடுத்தக் கடத்திற்கு செல்லுமா? என்ற கேள்வியும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

 

கவின், லொஸ்லியா காதல் எப்படியோ, கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக் கொண்ட இரண்டு பிரபலங்கள் தங்களது காதலை நிகழ்ச்சி மேடையிலேயே பகிர்ந்துக் கொண்டு அதிர வைத்துள்ளனர்.

 

கன்னட சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் சந்தன் ஷெட்டியும், பின்னணி பாடகி நிவேதிதா கவுடாவும் கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றனர். எப்படி கவின் - லொஸ்லியா காதல் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதுபோல் சந்தன் - நிவேதிதா இடையே காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்பட்டதோடு பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தும் இவர்கள் தங்களது காதல் குறித்து எந்த வித மறுப்போ அல்லது விளக்கமும் கொடுக்காமல் அமைதி காத்து வந்தார்கள்.

 

இந்த நிலையில், மைசூரு தசரா விழாவையொட்டி, மைசூரு அரண்மனை மைதானத்தில் நேற்று முன் தினம் இளைஞர் தசரா விழா நடைபெற்றது.

 

இதில்,சந்தன் ஷெட்டியும், நிவேதிதா கவுடாவும் இணைந்து பாடல் பாடினார்கள். பாடல் முடிந்ததும் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், நிவேதிதா கவுடாவிடம் தனது காதலை வெளிப்படுத்தியதோடு, தனது பாக்கெட்டில் வைத்திருந்த மோதிரம் ஒன்றை எடுத்து அவரது கையிலும் போட்டார்.

 

Shanthan Shetty and Niveditha Gowda

 

இந்த நிகழ்வை பார்த்து நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்ய, அங்கிருந்த நிவேதிதா மற்றும் சந்தன் ஆகியோரது பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

 

அதே சமயம், சந்தன் ஷெட்டியின் இத்தகைய செயலுக்கு பல கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர் தசரா விழாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டதாக கூறி வருகிறார்கள். ஒரு புறம் எதிர்ப்பு இருந்தாலும், மறுபுறம் அவரது காதலுக்கு பலர் வாழ்த்தும் தெரிவித்து வருகிறார்கள். 

 

Shanthan Shetty and Niveditha Gowda